நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானுடைய ரஜினி எதிர்ப்புப் பேச்சுக்கெல்லாம் ‘இம்மிடியேட் ஃ பயரிங்’ நடிகர் ராகவா லாரன்ஸ்தான் ! அது ரஜினியின் 70 ஆவது பிறந்த நாள் விழாவிலும் எதிரொலித்தது.
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்,.ரவிக்குமார்,பி.வாசு, கலைஞானம், நடிகை மீனா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ராகவா லாரன்சும் கலந்து கொண்டு பேசினார்.
“சிலர் தங்களை தமிழ்த் தாயின் மூத்த பிள்ளைகள்னு சொல்லிக்கிறாங்க.அப்ப நாங்கல்லாம் அமெரிக்காக்காரனுக்கா பெறந்திருக்கோம்.?நாங்களும் தமிழ்த் தாயின் அருமைப் பிள்ளைங்கதான்!
பெயர் சொல்லித் திட்டுனாத்தான் ஆம்பளையாம். அப்படி பெயரை சொல்லி திட்டித்தான் ஆம்பளைன்னு நிரூபிக்க வேண்டியதில்லை. நான் ராயபுரத்தில் பிறந்தவன்.எப்படியும் என்னால் பேசமுடியும். புரிஞ்சிக்க. நான் ரஜினியின் ரசிகன் அப்படியெல்லாம் பேச மாட்டேன்.