அதிசயங்கள் எப்போதாவது நடக்கும் !
உலகநாயகன் கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து மறுபடியும் நடிக்கப்போகிறார்கள் என்கிற செய்தி கடந்த சில வாரங்களாகவே கோடம்பாக்கத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
அது உண்மையா?
தற்போது தலைவர் 168 படம் இயக்குநர் சிறுத்தை சிவாவின் கையில் இருக்கிறது. தலைவருடன் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய முக்கிய கதாநாயகிகள் நடிக்கிறார்கள் ,இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதை அடுத்து,
தலைவர் 169 என்கிற படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வளரவிருக்கிறது என்பது அறிந்த செய்தியாகும்.
இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கப் போகிறது ,அதில் ரஜினியுடன் கமலும் இணைந்து நடிக்கலாம் என்பதை கோலிவுட் ஆச்சரியமுடன் ரசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை உறுதி செய்யப்படாத செய்தி.
இன்னொரு செய்தியும் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியும் அதிசயம் ஆனால் உண்மை அல்ல என்கிற அளவில்தான் இருக்கிறது.
தளபதி விஜய்க்காக கவுதம் மேனன் வைத்திருந்த கதை ‘யோகன் அத்தியாயம் ஒன்று ‘.இந்தப் படத்தின் முதல் போஸ்டரும் வெளியாகியது. ஆனால் கவுதம் மேனனுக்கும் ,விஜய்க்கும் கதையில் கருத்து வேறு பாடு. படம் கைவிடப்பட்டது.
ஆனால் இந்த கதை தொடர்பாக ரஜினியுடன் கவுதம் மேனன் பேசி ஒரு முடிவுக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது ரஜினி அந்த கதையில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். அது உண்மையா என்பதுதான் தற்போதைய சந்தேகமே.!
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.