கவர்ச்சியின் எல்லைக்கே போனவர் நடிகை மீரா மிதுன்.
மல்லுக்கு நிற்பார்.ஏளனமாக பேசுவார். வம்புக்குப் போவதில் இவரை விஞ்சியவர் எவரும் இல்லை. இவரை மத்திய அரசு தமிழகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநராக நியமித்திருந்தது. இவரது நியமன காலத்திலேயே பல மோசடி வழக்குகள் இருந்தன. இதையெல்லாம் தெரியாமல் ஒருவருக்குப் பதவி வழங்கப்படுகிறதென்றால் அந்த நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஏன் நித்தியானந்தாக்கள் தப்பி ஓட மாட்டார்கள். அரசின் நிர்வாக லட்சணத்துக்கு உதாரணமாக இருந்தது மீரா மிதுனின் பதவி நியமனம்.
பதவி வந்ததும் அவர் போட்ட ஆட்டமென்ன …”இனி யாரும் ஓடவும் முடியாது,ஒளி யவும் முடியாது .நான் இந்த பதவியை லஞ்சம் கொடுத்து வாங்க வில்லை.தேர்வு எழுதித்தான் வாங்கினேன்”என்று தெனாவெட்டாக கூறி வந்தார்.
வடிவேலு பாணியில் “மாப்பு…வச்சிட்டான்யா ஆப்பு” என்கிற கதையாக மீரா மிதுனை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
“உங்கள் மீது மோசடி வழக்குகள் புகார்கள் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அந்த துறை அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது.