கடந்த 10 ஆம் தேதியே தாய்லாந்தில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கப்போகிறவர்களின் பட்டியல் அதிகார பூர்வமாக இன்னும் சொல்லப்படவில்லை என்றாலும் படப்பிடிப்புக்கு குழுவினரில் ஒருவர் சொன்ன தகவலை இங்கு வெளியாகி இருக்கிறது.
அருண்மொழிவர்மன் முக்கியமான கேரக்டர். இந்த கேரக்டர்தான் பின்னாளில் முதலாம் ராஜராஜ சோழனாக மலரும். இந்த கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார். இதற்காகவே நெடிய முடி வளர்த்து வந்தார்.
அடுத்து கதையின் நெடுகிலும் வரக்கூடிய கேரக்டர் வந்தியத் தேவன். நெடிய முடியும் ,மீசையும் கல்கி கொடுத்திருந்த அடையாளம். அதை ஓவியர் மணியம் அழகாக வரைந்திருப்பார். இந்த கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.ஆனாலும் கார்த்தியை தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
விக்ரம்,சரத்குமார்,ஜெயராம்,பிரபு, விக்ரம் பிரபு,ரகுமான்,கிஷோர்,அஷ்வின், ஐஸ்வர்யாராய் பச்சன் .ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள் .
ஆனால் முக்கியமான வைணவன் ஆழ்வார்க்கடியான் கேரக்டரில் யார் நடிப்பார் என்பதுதான் ஊகிக்கமுடியாமல் இருக்கிறது. கல்கியின் கற்பனைப்படி ஆழ்வார்க்கடியான் குள்ளமாகவும் மொட்டைத் தலையில் முன் குடுமி வைத்து மீசை இல்லாமல் மேலாடை இல்லாமல் காணப்படுவார். வாதிடுவதில் வல்லவன். இந்த கேரக்டரை தவிர்க்க முடியாது.