17-ஆவது சென்னை இன்டர்நேஷனல் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நேரம் பார்த்து கார்த்திக் சுப்பராஜ் ஒரு படத்தின் முன்னோட்டம் காட்டினார்.படத்தின் பெயர் அல்லி. இரு மொழி பேசியது. கேரளத்தில் சோழா என்கிற பெயரில் வெளியாகி விட்டது
படத்தின் இயக்குனர் சனல் குமார் சசிதரன், ஹீரோ அகில் விஸ்வநாத், ஹீரோயின் நிமிஷா சஜசன் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் கேரளாவில் பிரபலமானவர்கள். ஆனால் அதற்கான டாம்பீகம் கொஞ்சம் கூட இல்லை. மனிதர்களாகவே வந்திருந்தார்கள்.
இன்டர்நேஷனல் பட விழாக்களில் சனல் குமாரை பார்க்கலாம் என்று இயக்குநரை பற்றிய சிறு குறிப்பினைத் தந்தார் கார்த்திக் சுப்பராஜ்.
படத்தின் முன்னோட்டம் நம்மை குளிருக்குள் தள்ளியது. அஜித் ஆச்சார்யாவின் ஒளிப்பதிவு படமாக்கப்பட்ட இடங்களில் நம்மை இறக்கிவிட்ட உணர்வு. அடர்த்தியான பனிப்பொழிவு ,ஓசையை மட்டுமே உணரவைக்கும் அருவிகள், பசுமை என அற்புதம் காட்டியது.
கேரளத்தின் மலைப்பகுதியில் சின்னஞ் சிறு கிராமம். பள்ளி மாணவி நிமிஷா, பிரியத்துக்குரிய அகில் விஸ்வநாத் இருவரும் கிராமம் நீங்கி ஒருநாள் பட்டணம் பார்த்தால் என்ன என்கிற முடிவுடன் கிளம்புகிறார்கள். கூடவே அகிலின் ஆசானும் சேர்ந்து கொள்கிறார். என்ன நடக்கிறது என்பதுதான் மொத்தப்படமே.!
முன்னோட்டமே இதான்யா சினிமா என சொல்ல வைத்தது.
அடக்கமாக வந்திருந்த நாயகி நிமிஷாவிடம் ‘கவர்ச்சிக்கு மாறுகிற எண்ணம் இருக்கிறதா” என்று கேட்டதற்கு “தனக்கு திறமையின் மீதுதான் நம்பிக்கை கவர்ச் சியின் மீதல்ல”என பதிலளித்தார்.