அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் ‘என்னை அறிந்தால் ‘. இப்படத்தை பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இயக்குனர் ஷங்கரின்’ ஐ ‘யுடன் மோத விட முடிவு செய்துள்ளனராம். .’ஐ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்ட
மிட்டிருந்தனர். ஆனால், தெலுங்கில் சங்கராந்தி அன்று ஏற்கெனவே நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அதேபோல் இ ந்தியிலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.எனவே இந்நேரத்தில் படத்தை வெளியிட்டால், படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்காது என்பதாலும், அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது என்பதற்காகவும் பொங்கல் ரேஸில் இருந்து ‘ஐ’ விலகுவதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.