இசைஞானி இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். யுவன்சங்கர் ராஜா, சுஜயா என்ற பெண்ணை முதலில் காதல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். சுஜயா, யுவன்சங்கர் ராஜாவிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு வெளிநாடு போய்விட்டார்.அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது.ஆனால், இரண்டாவது திருமணமும் நிலைக்கவில்லை. யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இரண்டுபேரும் பிரிந்து விட்டதாக வும் தகவல் வெளியானது.இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாகவும், தன்பெயரை அப்துல் ஹாலிக் என மாற்றி கொண்டதாகவும் , மூன்றாவது முறையாக மலேசியாவைச் சேர்ந்த ஜப்ஃரோன்னிசா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இச் செய்தி குறித்து அப்போது யுவன் கூறியதாவது,
‘என் தாயின் மரணம் தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது., இந்த நிகழ்வுக்கு பின்பு மிகவும் மனம் உடைந்து இருந்த நேரத்தில் இஸ்லாமிய நண்பர் ஒருத்தர் கொடுத்த அறிவுரையால் தான், என் மனம் தெளிவு அடைந்தது .
“எனக்கு 25ல் முதல் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்கள்தான் நிலைத்தது. என் 30வது வயதில் இரண்டாவது திருமணம். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. விவாகரத்துக்காக காத்திருக்கிறோம் ,இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். மீண்டும் 3வது முறையாக திருமணம் செய்ய வேண்டும். எனக்கென குடும்பம் வேண்டும் என உணர ஆரம்பித்துள்ளேன். என்னுடைய பிரச்சினையே, என் துணையுடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போவதுதான்.ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் இசையமைக்க வேண்டியுள்ளது. அதில் எனது நேரம் முழுவதும் போய்விடுகிறது,” என்று குறிப்பிட்டார்.இந்நிலையில்,. இவருக்கும் மலேசியாவை சேர்ந்த ஜப்ஃரோன்னிசாவுக்கும் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமண தேதி எப்போது என்கிற தகவல்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் திடீரென தனது திருமணத்தை நடத்த முடிவு செய்த யுவன், அதையும் கீழக்கரையில் மணமகள் வீட்டிலேயே நடத்திவிட தீர்மானித்தார் என்கிறார்கள்.. நேற்று வரைக்கும் கூட இந்த தகவலை யாருக்கும் அவர் சொல்லவில்லையாம். திடீரென இன்று அவருக்கு திருமணம் நடப்பதை அரசல் புரசலாக கேள்விப்பட்ட அவரது நண்பர்கள், யுவன் நமக்கு கூட சொல்லலையே என்று அதிர்ச்சியாகியிருப்பதாக தகவல். அதுமட்டுமல்ல, இந்த திருமணம் கீழக்கரையில் நடந்தாலும், அங்கும் வெகு விமரிசையாக நடைபெறாமல் மிக மிக எளிமையாகவும் ரகசியமாகவும் நடந்திருக்கிறது.அதைவிட இன்னுமொரு அதிர்ச்சி தகவல் .அவரதுதந்தை இசைஞானி இளையராஜாவுக்கும், இந்த திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே சப்போர்ட்டாக இருக்கும் அவரது சகோதரர் கார்த்திக்ராஜாவுக்கும் .அவரது சித்தப்பா கங்கை அமரன் குடும்பத்திற்கு கூட கூறவில்லையாம் யுவன்.