ஒரு திரைப்படத்துக்கான அம்சங்கள் எவை எவையோ அவை அனைத்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் இருக்கிறது. தலைவியாக இருந்து ஊழல் குற்றவாளியாக மறைந்திருந்தாலும் அவரது கட்சித் தொண்டர்களால் ‘அம்மா ‘என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்.
அவரது உண்மையான வாழ்க்கையை எவராலும் படமாக்க முடியாது என்றாலும் சம்பவங்களை கோர்த்து கதை பண்ண முடியும். அதைத்தான் ஏ.எல்.விஜய்,கவுதம் மேனன் ,பிரியங்கா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கவில்லை என்பதாக சொல்லி கவுதம் மேனன் கற்பனையை கலந்து ஒரு வெப் சீரியலை எடுத்துக் கொண்டிருக்கிறார். மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரரை எம்.ஜி.ஆராக கற்பனை செய்திருக்கிறார்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் கருணாநிதியாக கற்பனை செய்யப்பட்டவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இழிவு செய்வது மாதிரியே இருக்கிறது.
ஜெயலலிதாவை வற்புறுத்தி சினிமாவுக்கு கொண்டுவந்ததை போல கதை போகிறது.நிறைய முரண்பாடுகள் .
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் பொருத்தமாக இருக்கிறார். கவுதம் மேனன் எடுத்துக் கொண்டிருக்கிற வெப் சீரியல் மன நிறைவைத் தரவில்லை. போகப் போக எப்படி வருமோ தெரியாது.