மராத்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘நட்சாம்ராட்’ படத்தை இயக்குனர் கிருஷ்ண வம்சி தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தில்,, மராத்தியில் நானா படேகர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.பொதுவாக தான் நடிக்கும் படங்களில் மற்ற வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வது பிரகாஷ் ராஜின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்,ஐதராபாத்தில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில்,ஆர்ட் டைரக்டருக்கும், இயக்குனருக்கும் பிரகாஷ் ராஜ் வழக்கம் போல், உதவிகள் செய்து கொண்டிருந்தார். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இயக்குனர் கிருஷ்ணவம்சி, எனது படக் குழுவில், புதிய உதவி இயக்குனராக பிரகாஷ் ராஜ் சேர்ந்துள்ளார். அவரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் ஏற்கனவே, தோனி, உன் சமையலறையில் ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.