இந்த மாதம் வெளியாகிற படங்களில் ஹீரோவும் ஒன்று…
சிவகார்த்திகேயன் நடித்திருக்கிற படம்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு..பி.எஸ். மித்ரன் இயக்குகிற படம்.
சிவா-மித்ரன் இணைகிற படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த படத்தின் கூடுதல் அட்ராக்சன் யுவன் சங்கர் ராஜா.
பா.விஜய் பாடல் எழுதியிருக்கிறார். அர்ஜுன்,கல்யாணி பிரியதர்ஷன் ,இவானா, ஆகியோரும் இருக்கிறார்கள்.
திடீரென யுவன் சைடிலிருந்து ஒரு ஆச்சரியமான செய்தி வருகிறது.
“என்னுடைய இசையில் அப்பா இளையராஜா பாடியிருக்கிறார்”
அதற்கான படத்தையும் வெளியிட்டிருக்கிறார். பாடல் எழுதிய பா. விஜய்யும் இருக்கிறார்.
ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.