சித்தார்த்துக்கு ரொம்பவே ஞாபக சக்தி…
ஒப்புவமை சொல்கிறேன் என நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்து திருப்பி அடித்திருக்க முடியுமா?
“பிரதமர் மோடியும் ,உள்துறை மந்திரி அமித்ஷாவும் பகவான் கிருஷ்ணன் ,அர்ஜூனன் போன்றவர்கள் ” என்று ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். 370 வது சட்டப்பிரிவை மோடி அரசு தூக்கியதை வைத்து இவ்வாறு சொல்லியிருந்தார்.
தற்போது நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை நடக்க ஆரம்பித்திருக்கிறது. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி இருக்கிறது, இதை கண்டிக்கும் வகையிலேயே டிவிட்டரில் நடிகர் சித்தார்த் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அந்த கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கானது….அவரது பெயரை சொல்லாமலேயே அடித்து தூக்கியிருக்கிறார்.
“அந்த இருவரும் கிருஷ்ணர்,அர்ஜூனன் அல்லர்.அவர்கள் சகுனியும், துரியோதனனும் ஆவர்.பல்கலைக் கழகங்களை ,ஜமியாமிலா மாணவர்களை தாக்குவதை நிறுத்த வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.
மாணவர்களின் பைக்குகளை போலீசார் குறி வைத்து அடித்து நொறுக்குகிறார்கள்.