பச்சை ஆபாசம் என சொல்லும் அளவுக்கு காட்சிகளும், வசனங்களும் உள்ள படம்தான் கேப்மாரி. முதுபெரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கிற படம்.
இந்த படத்தின் கதாநாயகன் ஜெய் .
தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் இந்த படத்துக்கு தனது கண்டனத்தை கடுமையுடன் சொல்லியிருக்கிறார்.
“சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களை எப்படி ஜனங்க பார்க்கிறதுக்கு வருவாங்க. டைரக்டர் எஸ்.ஏ,சந்திரசேகர் அவ்வப்ப அரசியல் பேசுவார் .நாட்டை எப்படி காப்பாத்துவார். இவரை போக்சா சட்டத்தின் படி கைது செய்தாலும் தப்பு இல்ல என்பது எனது கருத்து” என சொல்லியிருக்கிறார்.