பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால் . டாக்டருக்கு படித்தவர். குப்புசாமியும் அனிதாவும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். புரட்சிகரமான திருமணம்.
இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவர்தான் பல்லவி அகர்வால் .
இவரை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை என்பதாக போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். தங்கையுடன் சண்டை போட்டுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய பல்லவி எங்கே போனார்?
வீட்டில் புயலை கிளப்பி விட்டிருக்கிறது.
ஊரில் பலவிதமாக பேச்சு. காதல் பிரச்னையாக இருக்கலாமோ என பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் பல்லவியின் பேஸ் புக் கணக்கில் பல்லவி “நான் ஒன்றும் காணாமல் போகவில்லை. கடத்தப்படவும் இல்லை. “என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
ஆனால் வீட்டுக்கு வராமல் எங்கே இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லவே இல்லை.
போலீசார் தீவிரமான விசாரணையில் இருக்கிறார்கள் பல்லவியை தேடி வருகிறார்கள்.