நயன்தாராவின் உதவியாளர்களில் ஒருவர் மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர். எந்த விஷயமானாலும் அவரை கன்சல்ட் பண்ணாமல் முன்னரெல்லாம் நயன் முடிவு எடுப்பதில்லை. தற்போது விக்னேஷ் சிவனின் அந்தரங்க நட்பை பெற்றிருக்கிற நடிகை முன்னைப் போல மந்திரக்கயிறுகளில் நம்பிக்கையுடன் இருக்கிறாரா இல்லையா?
இருக்கிறார் என்பதை அவரது காலில் கட்டப்பட்டிருக்கும் கறுப்புக் கயிறு சொல்லும்.
காதலர் விக்கிக்கும் அந்த நம்பிக்கை உண்டு என்பதை அவரது கையில் கட்டியிருக்கிற கயிறுகள் சொல்லும்.
ஆக எந்த பிரபலமானாலும் அவர்களின் மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருக்கும் .அது ஆசையின் விளைவு.
சிம்பு,பிரபுதேவா காதலைப் போல விக்கியின் காதலும் முறிந்து போகக்கூடாது என்கிற அச்சம் நயனுக்கு மட்டுமல்ல விக்கிக்கும் இருக்கலாம்.
விக்கி-நயன் காதல் மிகவும் வலிமையுடன் இருக்கிறது.அது உடைந்து போகாது. ஏனெனில் இருவருமே ஒருவரை சார்ந்து ஒருவர் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதாக கோலிவுட் அழுத்தமாக நம்பினாலும் தெய்வ அருள் வேண்டும் அல்லவா!
அந்த அருள் வேண்டிதான் அவர்கள் ஜோதிடர் சொன்னபடி ஆலயங்கள் சென்று வருகிறார்கள்.
அமிர்தசரஸ் சென்று பொற்கோவிலை வணங்கி வந்தார்கள்.
திருப்பதி வெங்கடேஸ்வரனின் அருள் வேண்டி அவரையும் வணங்கினார்கள். காஞ்சிபுரம் அத்திவரதரை வணங்கினார்கள்.
கன்னியாகுமரி பகவதி ஆலயம் சென்றார்கள்,
திருச்செந்தூர் சுப்பிரமணியரை தரிசனம் செய்தார்கள்.
சுசீந்திரம் ஆலயம் சென்றார்கள்.
ஒரு நடிகை தனது காதலருடன் இத்தனை ஆலயங்கள் சென்றதில்லை என்கிற வரலாற்று உண்மையை இந்தக் கோவில் படிக்கட்டிலாவது எழுதி வைக்கலாம்.
இந்த ஆண்டில் இவர்களின் கல்யாணம் நடக்கும் என்பது நிச்சயமில்லை. மார்கழியில் கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை.
ஆனால் புத்தாண்டில் தை மாதத்தில் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.