பரா சரா பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய படம் வீரையன். இதில் கதையின் நாயகர்களாக இனிகோ பிரபாகர்,கயல் வின்சென்ட்,தென்னவன், வேலா ராமமூர்த்தி,ஆரண்யகாண்டம் வசந்த்,ஆகியோர் நடிக்க,கதையின் நாயகிகளாக,இந்தியா பாகிஸ்தான் நாயகி சைனி,சின்னத்திரை ஹேமா,திருநங்கை ப்ரீத்திஷா, யூகித் ஆகியோர் நடிகின்றனர். இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து இயக்கி வரும் எஸ்.பரீத் கூறியதாவது,சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை .கால ஓட்டத்தில் இது தடம் புரண்டு ,இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்ற பின்புலத்துடன் 90 களில் நடக்கும் கதை இது. இதற்காக தஞ்சையின் பல பகுதிகளை தேடுவதற்கே சில மாதங்களை செலவிட்டேன் மேலும் வேறு யாரும் படபிடிப்பு நடத்தாத இடங்களை தேடிப்பிடித்து படப்பிடிப்பு நடத்தினோம்.காவேரிக்கரையின் பல பகுதிகளில் நடத்திய படப்பிடிப்பு ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கும்.தகப்பன் தன மகன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக பையன் போராடும் போராட்டத்தில்,சமூகத்தில் இருந்து கிடைத்த சிறிய மரியாதைக்காக கேவலமான மூன்று பேர் அந்த பையனுடன் சேர்ந்து போராடும் போராட்டமே இப்படம். யாதார்த்தம், கமர்சியல் இவை இரண்டுக்கும் நடுவில் புதிய கோணத்தில் இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. என்கிறார்.இவர், கதாசிரியர் கலைமணியிடம் உதவியாளாராகவும்,களவாணி படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடதக்கது. இப்படத்தின் ஒளிப்பதிவை,பி.வி.முருகேசா கவனிக்க, சண்டிவீரன் எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார்