ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து சிம்புவின் மாநாடு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சிம்புவும் கடுமையான குத்துச்சண்டை பயிற்சியில் இருக்கிறார்.எக்குத்தப்பான குத்து விட்டு யார் மூக்கையும் பதம் பார்க்காமல் இருந்தால் சரி.
சிம்புவுக்கு யார் எதிரி என்பது இன்னும் படத்தில் உறுதியாகவில்லை. வெயிட்டான வில்லனை எதிர்பார்க்கிறார்கள். அரவிந்தசாமியை அணுகியதில் அவர் நோ கால்ஷீட் என சொல்லிவிட்டாராம் .தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தபாங் 3 வில்லன் நான் ஈ சுதீப்பை கேட்கலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறது படக்குழு. நாயகனால் தள்ளிப்போய் தனி உடன்படிக்கை கையெழுத்தாகி சமரசம் உலாவும் நேரத்தில் வில்லனால் வில்லங்கம் வந்து விடக்கூடாதே! சாமி சரணம் !