கதை,இயக்கம் ;பி.எஸ்.மித்ரன், வசனம் ;பொன்.பார்த்திபன், அந்தோணி பாக்யராஜ் ,சவரி முத்து.ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் , இசை:யுவன் சங்கர் ராஜா,
சிவ கார்த்திகேயன்,அர்ஜூன் ,அபய் தியோல் ,கல்யாணி பிரியதர்சன் ,இவானா ,அழகம் பெருமாள்,
*************
“கல்வி சிஸ்டம் சரியில்லை.?”
“ரைட்டு …அதுக்கு மாத்துக் கல்வி சிஸ்டம் வெச்சிருக்கியா …? …சொல்லு.!”
அர்ஜூன் தனது சிஸ்டத்தை சொல்றார்.
“அடப்பாவி.! இப்படி சிஸ்டத்தை மாத்தினா கார்ப்பரேட் கம்பெனிகளே இல்லாமப் போயிருமே ! எங்க தொழிலே கல்வியை வியாபாரமா பண்றதுதான். கல்வியிலதான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியிது !அதுக்கு வேட்டு வைக்க பாக்கிறியா? ஒழி !” என அர்ஜூனின் காலை ஓடிச்சு மூலையில் உக்கார வச்சிடுறாங்க.
அதைத் தொடர்ந்து ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி போராடுறார் ,கார்ப்பரேட் கம்பெனியின் மிகப்பெரிய மொள்ளமாரித்தனத்தை காலி பண்றார் என்பதுதான் கதையின் சுருக்கம்.
சிவகார்த்திகேயனை மிகவும் சீரியஸாக காட்டிட்டா அவரது ரசிகர்களை திருப்தி பண்ண முடியாதுன்னு தொடக்க காட்சிகளில் ஜாலியா காட்டுறதுக்காக அவரை போலி சர்டிபிகேட் தயாரிக்கிற ஆசாமியா காட்டுறாங்க. அதில அவர் ஆட்டம் , ஓட்டம் ,பாட்டு, காதல்னு கலகலப்பாக தியேட்டரை கவனிக்கிறார்.
உண்மையான திறமையுள்ள மாணவியின் கண்டு பிடிப்புகளை கார்ப்பரேட் கல்வி தந்தை காலி பண்ணிட்டு அந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாகிய பின்னர்தான் சிவாவின் கேரக்டர் சூடு பிடிக்கிது. அதாவது பர்ஸ்ட் ஹாப்பை விட செகண்ட் ஹாப்லதான் விஷயம் அதிகம் இருக்கு.
சமூகத்துக்கு நல்லதை சொல்லணும் என்பதற்காக கோபத்துக்கு ஆளாகிற அர்ஜூன் ,சிவ கார்த்திகேயன் இருவரும் படத்தில மட்டுமில்ல, நிஜத்திலேயும் கல்வித் தந்தைகளின் கடுப்புக்கு ஆளாவார்கள் .
எந்த அளவுக்கு கல்வியானது வியாபாரமாகி இருக்கிறது, திறமையுள்ள ஏழை மாணவ மாணவியரின் கண்டு பிடிப்புத் திறமை காயடிக்கப்பட்டிருக்கிறது என்பதை கோபத்துடன்தான் சொல்லி யிருக்கார் மித்ரன். அரசாங்க ஆதரவுடன் நடக்கிற அக்கிரமத்தை இப்படி நாலு பேரு சத்தமா சொன்னாத்தான் நம்ம மக்களுக்கும் சூடு வரும். இல்லேன்னா அரசியல்வாதிகள் தரும் அஞ்சுக்கும் ,பத்துக்கும் ஓட்டை வித்துட்டு இவன் நானும் ராஜாதாண்டான்னு டாஸ்மாக்ல விழுந்து கிடப்பான், சொரணைங்கிறது மறத்துப் போச்சுங்க.
அர்ஜூன் ,சிவகார்த்திகேயன் இவங்க ரெண்டு பேர்ல யார் பெஸ்ட் னு கேட்டு கொச்சைப் படுத்தாம சீனியருக்கு முதலிடத்தை கொடுத்துருவோம். ஏன்னா சீனியரை மதிக்கிறதில்லன்னு இப்ப வர்ற நடிகர்கள் மீது அதிருப்தி இருக்கு. அந்த பாவத்தை நாம்பளும் ஏன் சுமக்கனும்? ஆனா இவங்க ரெண்டு பேரும்தான் கதையை சுமக்கிறாங்க. இவர்களில் யார் ஒருத்தர் இல்லேன்னாலும் கவுத்து மூடிட வேண்டியதுதான்.
உக்காந்த இடத்திலேயே இருந்துகிட்டு அடுத்த வீட்டு ஆணியை பிடுங்கிறதுக்கு அபய் தியோலை விட வேற ஜாய்ஸ் தெரியல. அந்த கேரக்டர் நிஜத்தில் யாரை இமிடேட் பண்ணுது? மித்ரனை கேட்கணும் !
கல்யாணி, இவானா இவங்க ரெண்டு பேர்ல இவானாதான் பெஸ்ட் .காரணம் அந்த பொண்ணோட கேரக்டர் அப்படி !
இந்த படத்தில தொங்குசதைன்னு ரோபோ சங்கரை சொல்லலாம். வேஸ்ட்.!
ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கிரேடிங்கில் செம அடி வாங்கியிருக்கு. எப்படி கவனிக்காம விட்டார் அந்த லெஜண்ட் ? பல காட்சிகளில் எக்ஸ்டராவா கிரீன் திட்டுதிட்டா …!
யுவனின் இசையில் அப்பா இளையராஜா பாடிருக்கார் .அந்த பெருமை ஹீரோ படத்துக்கு இருக்கு.
வசனம் எழுதிய முப்பெரும் பேனாக்களுக்கு முழு மரியாதை. ரப் நோட்டு விஷயம் இருக்கே ..பெற்றோர்களின் கவனத்தை ரொம்பவே ஈர்த்திருக்கு. “எவ்வளவு போலி சர்டிபிகேட் பண்ணினே ..போலீஸ் தேடுச்சா,இப்ப உண்மையை காப்பாத்தணும்னு நினைக்கிறே ..போலீஸ் தேடுது. “என்கிற உண்மை வரிகள் செமத்தியா இருக்கு.
அப்துல்கலாமின் கனவு காணுங்கள் என்கிற வரிகளை அரசாங்கமே கற்பழிக்கிறது என்பதுதான் உண்மை.
சினிமா முரசத்தின் மார்க் 3 / 5.