வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தயாரித்த பிரமாண்ட படைப்புகளுக்கு சொந்தக்காரரான கலைப்புலி எஸ்.தாணு, தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தை பிரமாண்ட தயாரிப்பாக தயாரிக்கிறார்.
இது குறித்து எஸ்,தாணு தனது ட்விட்டர் பக்கத்தில்,”அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் சூர்யாவின் 40 வது படத்தை வி.கிரியேஷன்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.