தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி லட்சுமிமேனனுடன் ஜோடியாக நடிக்கு படம் மிருதன். இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்திசௌந்தர்ராஜன் இயக்குகின்றார். D.இமான் இசையமைக்கின்றார்.இப்படம் ஹாலிவுட் படமான ‘வார்ம் பாடீஸ்’ படத்தின் தழுவல் என்று இணையதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூறியதாவது, ‘இணையதளங்களில் பரவும் செய்திகள் வெறும் வதந்தியே என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். வார்ம் பாடீஸ் படத்திற்கும் மிருதன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளார். இப்படம் பொங்கலன்று வெளியாகிறது.