அமிதாப் பச்சன். இந்தியாவின் திரை உலக முக்கிய அடையாளங்களில் இவரும் ஒருவர்.
அமைதியான மனிதர். நல்லவர்.அதனால்தான் அவருக்கு நடப்பு அரசியல் பிடிக்கவில்லை.
இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது இன்று புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.ஆனால் அமிதாப் கலந்து கொள்ள வில்லை. இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொள்கிறார்கள்.
கலந்து கொள்ளாதது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் காரணம் சொல்லியிருக்கிறார்.
“காய்ச்சல். பயணம் செய்ய முடியாது. இதனால் டில்லியில் நடக்கிற தேசிய விருது வழங்குகிற விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலாது. வருந்துகிறேன்” என்பதாக அந்த மாமனிதர் பதிவு செய்திருக்கிறார்.
விரைவில் குணம் பெற சினிமா முரசம் பிரார்த்திக்கிறது.