வருடம் முடிய இன்னமும் ஐந்து நாட்களே இருக்கின்றன. ஆறாவது நாளில் ஆங்கிலப் புத்தாண்டு 2020 பிறக்கிறது.
அதற்குள் எந்தப்படம் முதலிடம், அதிக வசூல் பெற்று முதலிடத்தில் இருக்கிறது,எந்த நடிகர் அதிகப்படங்களில் நடித்திருந்தார், சிறந்த நடிகர் யார் என்பது போன்ற தகவல்களால் திணற அடித்து விடுவார்கள்.
இப்போது இன்னொரு பஞ்சாயத்து. வெற்றி தியேட்டர் நிறுவனம் பதிவு செய்த ஒரு செய்தியில் பாகுபலி 2 தான் தங்களின் தியேட்டரில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் வெளியிட்டவர்கள் ஸ்ரீ கிரீன் ப்ரொடக்சன் .
இவர்கள் தயாரித்த படம்தான் அடங்காதே! இதில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும் சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர்.ஷண்முகம் முத்துசாமி இயக்கி இருந்தார். தற்போது ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
“உங்களின் தயாரிப்பில் எனது இயக்கத்தில் அடங்காதே படம் எடுத்து முடித் து மூணு வருஷம் ஆச்சு. அந்தப் படத்தை ஏன் இன்னமும் திரைக்கு கொண்டு வரல?”என்கிற கேள்வியை கேட்டிருக்கிறார்.
பதில் இல்லை.
@shan_dir
பாகுபலி-2 முதலிடம்..?? ஆனால் அதை வாங்கி தமிழகமெங்கும் வெளியிட்ட
தயாரிப்பில் எனது இயக்கத்தில் உருவான
நடிப்பில் #adangathey படம் அனைத்து பணிகளும் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது..! என்ன காரணம்..?