கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ,பொருளுதவி ஆறுதல் கூறி வருகிறார் இசைஞானி இளையராஜா!. வெள்ளத்தில் மூழ்கிய லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளிக்கு கொட்டும் மழையில் ,படகில் சென்று அக்குழந்தைகளுக்கு உதவிய ராஜா,தொடர்ந்து சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை வெள்ளத்தால் வீடிழந்த மக்களுக்கு இளையராஜா வழங்கியுள்ளார்.