கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிக்கும் படம்தான் ‘கால் டாக்சி’
கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிற பின்னணியில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக வரவிருக்கிறது “கால்டாக்ஸி”.
இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக “மெர்லின்” , “மரகத காடு” ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் ,அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.