விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் தரும் நடிகராக, தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் படங்களை தந்து வருபவர் நடிகர் விதார்த். தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான “நட்சத்திரா” படத்தின் முதலாவது போஸ்டரானது மீடியா மத்தியிலும், இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது…
“மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த ஆச்சர்யங்களை ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். “நட்சத்திரா” படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும்.”என்கிறார்.
புதுமுக இயக்குநரான மனோஜ் ராம் கூறும்போது….
இதைச் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை. தயாரிப்பாளர்கள் பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது ஆகியோர் என் மீதும் திரைக்கதை மீதும் வைத்த நம்பிக்கையால மட்டுமே இத்திரைப்படம் சாத்தியமானது.
இன்று இப்படம் திட்டமிட்டபடியே மிகச்சரியான முறையில் உருவாகி வந்திருப்பதில் படக்குழு மிகுந்த மிகிழ்ச்சியில் இருக்கிறது. விதார்த்தின் அர்பணிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் பிரதிபலிக்கிறது. அவரது கதாப்பாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. என்றார்.
நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இப்படத்தில் விதார்த் ஜோடியாக, அவரது மனைவியாக நடித்துள்ளார். செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.