நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட முன்னணி நடிகையான இவர் தமிழில் பாக்சர், போடா முண்டம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.இந்நிலையில்,இவர் பெங்களூரில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டார்.இதில், பாலிவுட் படத்தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் உள்பட சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.பார்ட்டியில் உற்சாகம் கரைபுரண்டோட ,கூடவே போதையும் தலைக்கேற , படத் தயாரிப்பாளருக்கும்,சஞ்சனாவுக்கும் மகிழ்ச்சியாக தொடங்கிய பேச்சு வார்த்தை ஒருகட்டத்தில் வாக்குவாதமாக மாறியதாகவும், அப்புறம் என்ன, தகராறு தான். சஞ்சனா கையில் வைத்திருந்த விஸ்கி கிளாஸ்,மற்றும் அங்கிருந்த பீர்பாட்டிலை அப்படியே தயாரிப்பாளர் மீது வீச, படத் தயாரிப்பாளருக்கு ரத்தக்காயம். .. பின்னர் அங்கிருந்த மற்ற நடிகர், நடிகைகள் சண்டையை விலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சஞ்சனா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெங்களூர் கப்பன் பார்க் போலீசில் நேற்று முன் தினம் புகார் செய்துள்ளார்படத்தயாரிப்பாளர்வந்தனா ஜெயின். இதுபற்றி நடிகை சஞ்சனா கூறும்போது, பார்ட்டியில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால், உடல் ரீதியாக யாரும் தாக்கிக்கொள்ளவில்லை. நான் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.