யார் யாருக்கோ என்னன்னமோ ஆசை…!
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்துக்கும் ஒரு ஆசை. !மண்ணு தின்ன போகிறத மறைக்கிறதில்ல என்கிற பாலிசி எடுத்திருப்பாரோ என்னவோ துணிகரமாக போட்டோ ஷூட் பண்ணுவார்.அதை டிவிட்டர் பக்கத்தில் போட்டு பாலோயர்ஸ் எண்ணிக்கையை உயர்த்தி விடுவார்.
அத்தகைய படங்களை வயோதிகமே ரசிக்கிறபோது வாலிபம் கிரங்கிப் போகாதா என்ன?
யாஷிகாவுக்கு ஓர் ஆசை.!
தல அஜித்குமார் டிவிட்டர் கணக்குக்கு வரவேண்டும் என்று.
தல அஜித்குமாருக்கு ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும் டிவிட்டரில் பல லட்சங்களில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தனக்காக இருந்த ரசிகர்கள் மன்றங்களை கலைத்து விட்டவர் .
மன்றங்களில் இருந்தால்தான் ரசிகர்களா …டிவிட்டரில் இருக்கிறோம் சார் என அவருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் டிவிட்டரில்.!
“தல அஜித்சார் டிவிட்டரில் ஜாயின் பண்ணனும்.இதே மாதிரியான ஆசை வேறு யாருக்காவது இருக்கா?” என கேட்டிருக்கிறார் யாஷிகா .