நேற்று சென்னை கல்லூரி மாணவிகள் சிலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலம் போட்டதால் கைது செய்யப்பட்டனர்.
பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இதனையடுத்து இந்த கோல விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழகம் முழுவதும் பரவலாக வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டு உள்ளது.
திமுக தலைவர்,மு.க.ஸ்டா லின்,கனிமொழி எம்.பி. ,கோபாலபுரம் வீடு உள்ளிட்ட சில அரசியல் கட்சி பிரபலங்கள் வீடுகளிலும் குடியுரிமைச்சட்ட எதிர்ப்பு கோலங்கள் போடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ’இதுபோன்ற ஒரு விஷயத்தை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
மக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த கோலத்தை ஒரு கருவியை பயன்படுத்துவதை யாராலும் கற்பனை செய்யவே முடியாது.
ஒவ்வொருவரின் மனதிலும் எவ்வளவு ஆழமாக இந்த விஷயம் பதிந்து உள்ளது என்பதையே இந்தக் கோலங்கள் காட்டுகின்றன.
மக்களின் உணர்வுகளுக்கு வண்ணங்கள் வழங்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த வண்ண கோலங்களில் மறைந்துள்ள செய்தியை உலகமே அறிந்துள்ளது என்று கூறியுள்ளார்.