பொதுவாக இலவச ஆலோசனை மையங்கள் என சொல்லப்படுகிற இடங்களுக்கு சென்றால் அங்கேயும் குறிப்பிட்ட தொகை கேட்கிறார்கள்.
பிறகெதுக்கு இலவசம் என்கிற பெயர்?
எதுவுமே இல்லாமல்தான் ஏழைகள் அங்கு வருகிறார்கள். அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது நீதியாகுமா? தொடக்கத்திலேயே இப்படி வசூலிப்பவர்கள் போகப்போக இன்னும் எதற்கெல்லாம் பணம் கேட்பார்களோ என்கிற பயம் அந்த ஏழைக்கு வராதா?
இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிற நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. அந்த மன்றங்களில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் தொடங்கலாம். தொடங்கியதாக தெரியவில்லை.
ஆனால் 2000 ஆவது ஆண்டில் நடிகர் சரத்குமார் இலவச சட்ட ஆலோசனை மையத்தை தொடங்கி இருக்கிறார். கடந்து போன ஆண்டுகளில் நடிக மன்றங்களின் சேவை திட்டங்களை பற்றிய ஆய்வு செய்த ஒரு நண்பர் இந்த தகவலை நமக்கு அனுப்பி இருக்கிறார்.
சரத்குமார் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததை நினைவு படுத்துகிறார்.
“அகில இந்திய சரத்குமார் ரசிகர்கள் நற்பணி மன்ற வளர்ச்சி,ஆக்கபூர்வமான மக்கள் சேவை ஆகியவற்றை மனதில் கொண்டு மன்றத்தை வலுப்படுத்தும் நோக்கமுடன் அகில இந்திய தலைமை மன்றத்தின் சரத்குமார் இலவச சட்ட ஆலோசனை மைய கவுரவ ஆலோசகராக செங்கல்பட்டு வி.இளங்கோவை நியமித்து இருக்கிறார். “
ஆலோசனை மையம் இன்றும் தொடருகிறது.இலவசமாக !