இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ‘தேர்ட் ஐ எண்டெர்டெயிண்ட்மென்ட் ‘சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது..
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி என்ன சொல்கிறார்?
“படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது.. ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம். கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானியும் சிரமப்பட்டார்கள்.
இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா என நான் சந்தேக மிகுதியில் இருந்தேன். ஆனால் அவர்களது அர்பணிப்பும் படத்தின் மீது அவர்களது காதலும் பிரமிக்கும்படி இருந்தது. சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் இருவரும் மிகக்கடுமையாக உழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மிக முக்கியமாக குறிப்பிடபட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது. “என்கிறார்.
இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்.