நாட்டு நடப்பு..
நள்ளிரவு மணி 12 தாண்டிய மறு நொடியே ஷாஹீன்பாக் பகுதி பனியின் கனத்தை உடைத்துக் கொண்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத் ‘புரட்சி ஓங்குக ‘என்கிற முழக்கம் எழுந்தது. இந்தியாவின் இளைஞர்கள் ஆண்களும் பெண்களுமாக திரண்டு இருந்தனர்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து புதிய ஆண்டினை புதுமையாக இப்படி எதிர்த்தார்கள் இந்தியாவின் தலைநகரில்.!வெளிநாட்டிலும் போராட்டம் நடந்தது.
பார்ட்டிகள் வேண்டாம்..பைக் விரட்டல்கள் வேண்டாம் என திரண்டிருந்தவர்கள் முடிவில் தேசிய கீதமான ‘ஜன கன மன “வை கம்பீரமாக பாடி விட்டு தேசியக் கொடிகளுடன் கலைந்து சென்றார்கள் .
“புதிய பிரதமர் வேண்டும்” என்கிற பதாகைகளை சிலர் ஏந்தி இருந்தார்கள்.