கட்டில் என்றாலே வாலிப வயோதிக சொந்தங்களுக்கு மிகவும் பிடிக்கும். கட்டிலில் பிறக்காத கதைகளா…அங்கு காணாத சொந்தங்களா….இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த கட்டிலின் பெயரில் ஒரு திரைப்படம்.
இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார்.
சிருஷ்டிடாங்கே கதாநாயகி. இந்த இருவரை தவிர்த்து நாவலாசிரியர் ஒருவரும் அந்த நாவல்களுக்கு ஓவியம் வரைந்தவரும் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக நடிக்கிறார்.. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசமும் நடிக்கிறார்.
பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். வைட்ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.இருவரும் சமுதாய புரட்சியாளர்கள். எதிர்பார்க்கலாம்.ஏமாற்றமாட்டார்கள்.