தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான டி.பி.திரிபாதி தில்லியில் இன்று காலமானார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவிவகித்து வருபவர் டி.பி.திரிபாதி(67). இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தில்லியில் இன்று காலமானார்.
டி.பி.திரிபாதியின் மறைவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.