என் மகனுக்கு வயது 42. இன்னும் திருமணம் கைகூடவில்லை. சிறு கடை வைத்து வியாபாரம் செய்கிறான். சரிவர வியாபாரமில்லை. வியாபாரம் நடக்குமா? திருமணம் நடைபெறுமா? – வாசகி, ஜெ.ஜெ. நகர்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. குடும்ப ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியும் சனிபகவானும் இணைந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சுகாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் லக்னாதிபதிகள் இணைந்து இருக்கிறார்கள்., தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் சுயபுக்தி முடியும் தறுவாயில் உள்ளது. இதனால் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். செய்தொழிலிலும் முன்னேற்றம் தென்படும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.