தற்போது நடந்து வரும் செவ்வாய் தசை எப்படி இருக்கும்? ஒன்பதில் இருக்கும் மூன்று கிரகங்கள் புதனின் சாரத்தில் இருப்பது என்ன பலன்களைத் தரும்? தற்போது குரு பெயர்ச்சி எப்படி உள்ளது?
– வாசகர், திருச்சி
உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவானுடன் இணைந்து இருக்கிறார். பாக்கியாதிபதி குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சூரியபகவானைப் பார்வை செய்கிறார். சந்திர மங்கள யோகம், சிவராஜ யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் சுயபுக்தி முடிந்துவிட்டது. செவ்வாய் தசை யோக தசையாக நடக்கும். வேலையில் உயர்வும் வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதபகவான் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவரின் சாரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் முக்கிய கிரகங்கள் இருப்பதால் உங்கள் முயற்சிகள் துரித வெற்றியை கொடுக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். கோசாரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவான் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.