தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 50 கிராம்,
பெருங்காயத்தூள் -¼ தேக்கரண்டி,
புளி – சிறிதளவு,
தக்காளி – 1,
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி,
பூண்டுப்பல் – 5,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை- சிறிதளவு,
எண்ணெய் – 1 தேக்கரண்டி,
நெய் – 1 மேஜைக்கரண்டி,
கடுகு – 1 தேக்கரண்டி.
மிளகாய் வத்தல் – 1,
கொத்தமல்லி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு – தலா 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல்- 4 மேஜைக்கரண்டி.
செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
பருப்பை நன்றாக கழுவி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல், பூண்டுப்பல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை வைத்து லேசாக வறுக்கவும்.
சீரகத்தை வறுத்த பொருட்களோடு சேர்த்து கிளறி ஆற விடவும்.
ஆறிய பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
புளியின் பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும்.
பிறகு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து ரசத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
சுவையான மைசூர் ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.