தேவையான பொருட்கள்
ப்ரோக்கோலி – 1
கேரட் – 2
சிகப்பு குடைமிளகாய் – 1
முள்ளங்கி – 1
வெங்காயம் – 1
பாதாம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிதளவு
அலங்கரிக்க
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் (coconut aminos or Tamari Soy Sauce) – 1 டீஸ்பூன்
சைஸ் வினிகர் – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 2 பல்
ப்ரோக்கோலி
செய்முறை
ப்ரோக்கோலி நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், குடை மிளகாய், வெங்காயம், முள்ளங்கியை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாதாமை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் ப்ரோக்கோலியை போட்டு 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு அதனுடன் நறுக்கிய கேரட், குடை மிளகாய், மிளகு தூள், வெங்காயம், உப்பு, முள்ளங்கியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக கலந்து கடைசியாக நறுக்கி வைத்துள்ள பாதாமை தூவி பரிமாறவும்.
அருமையான ப்ரோக்கோலி வெஜிடபிள் சாலட் ரெடி.