‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவதா நாயர் . ‘ரகுவிண்டே ஸ்வந்தம்’ ரசியா என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி கிருஷ்ணன். தற்போது, ஜக்கரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.முரளி கிருஷ்ணன் – ஷிவதா நாயர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினர்.இதையடுத்து, இருவருக்கும் கேரள மாநிலத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. ஷிவதா நாயர் தற்போது பாபி சிம்ஹாவின் வல்லவனுக்கு வல்லவன், அசோக் செல்வனின் ‘ஜீரோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இத் திருமணத்தில் நடிகர் ஆரி உள்ளிட்ட நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்திற்குப் பின்னர் நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன்,ஆனால் முன்னுரிமை எனது குடும்பத்திற்குத் தான் என்கிறார் நடிகை ஷிவதா . திருமணம் முடிந்த 2 நாட்களில் பாபி சிம்ஹாவுடன் வல்லவனுக்கு வல்லவன் படப்பிடிப்பில் ஷிவதா நாயர் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.