இரண்டுநாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று வந்திருக்கிறார்.
ஸ்ரீ சித்தகங்கா மடத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார்..பழுத்த சைவர் மாதிரி காணப்பட்ட மோடி பேசும்போது காங்கிரஸ் கட்சி,மற்றும் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிற கட்சியினரை கடுமையாக சாடினார்.
“போராட்டம் நடத்துகிறவர்கள் பக்கத்து நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கிற அக்கிரமங்களை கண்டிக்க வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த்த வேண்டும்.தலித்துகள்,மற்றும் சிறுபான்மையினரை அங்கு கொடுமை படுத்துகிறார்கள் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கள்” என்று கூறினார்