கதை திரைக்கதை வசனம் இயக்கம் ; டாக்டர் மாறன்.இசை ;தேவேந்திரன் (வேதம் புதிது.) ஒளிப்பதிவு : பாலாஜி .
டாக்டர் மாறன் ,தீஷா ,ஸ்ரீ மகேஷ் ,இமான் அண்ணாச்சி ,மனோபாலா .
*************
டிராபிக் விதிகளை சொல்லவேண்டும் என்பதற்காக டாக்டர் மாறன் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிற படம்.! அவரே படத்தில் டிராபிக் வார்டன் அஸ்வின் குமாராக வருகிறார்.முதல் பாதியில் இவரும் இமான் அண்ணாச்சியும் நமக்கு டிராபிக் விதிகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். விதிகளை மீறுவதால் எத்தகைய பேரிழப்புகள் என்பதை கூறி காதலையும் நடமாட விடுகிறார்கள். அஸ்வின்குமார்- சுபாஷினி (தீஷா) காதல் வளர்கிறது.
வில்லனாக பெரியவர் நந்தகுமார்.இவரது எய்ம் பணக்கார வீட்டுப் பெண்கள். உறவுக்கார பையனை கையாளாக வைத்துக் கொள்கிறார். ராபர்ட் ,ராஜசேகர் என்கிற பெயரில் கல்லூரி மாணவிகளை தனது காதல் வலையில் விழ வைக்கிறான் ராபர்ட். மாணவிகளுக்கு தெரியாமல் ஆண்டராய்டு போனில் படம் எடுத்து வைத்துக் கொள்கிறான். இதை வைத்துக்கொண்டு பெரியவர் மிரட்டுகிறார். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் பலவீனமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இப்படித்தான் காட்சிகள் இருக்கும் என்பதை கணித்து விடலாம்.
போக்குவரத்து விதிகளை சொல்வதில் மாறன் மிகவும் கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்குப் புதியவர் .இயக்குவதுடன் நின்றிருக்கலாம்.
சினிமா முரசத்தின் மார்க் 1 1/2 / 5