சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய ‘பீப் பாடல்’ ஆபாசத்தின் எல்லையாக இருப்பதாக கோவை பெண்கள் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை போலீஸார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகளை பகிர்ந்தது; பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது; ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வரும் 19ஆம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த சில மணிநேரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தியின்படி கோவை போலீசார் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் இன்று மாலை சிம்பு கைது செய்யப்படுவார் என்றும், அனிருத் தற்போது வெளிநட்டில் இருப்பதால் அவர் சென்னை திரும்பவுடன் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.