புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – 1/2 கட்டு தேங்காய் – 1 துண்டு புளி – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 6 பல் உப்பு – தேவையான அளவு .
புதினா துவையல் செய்முறை:
முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் புதினா போட்டு அதையும் மேலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிக்சி ஜாரில் தேங்காய், காய்ந்த மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் நாம் வறுத்து எடுத்துள்ள புதினாவும் சேர்த்து கொள்ளவேண்டும். பிறகு அதனை நன்றாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து முடித்து வெளியே எடுத்தால் சுவையான புதினா துவையல் ரெடி.