மதுரைன்னாலே சட்டுன்னு மல்லிப்பூவும், இட்லியும் தான் நம் ஞாபகத்துக்கு வரும்.அனைவரும் விரும்பி சுவைக்கும் அந்த மல்லிகை பூ மாதிரியான இட்லி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க …
இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 3 கப் வெந்தயம் – 1.5 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1 கப் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இட்லி அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் அலசி 3 மணி நேரம் வரை ஊற வச்சுக்கோங்க . பிறகு வேறு ஒரு கிண்ணத்தில் உளுந்தை போட்டு அதையும் இதே மாதிரி ஊற வைங்க .
பிறகு நல்லா ஊறிய உளுந்தினை கிரைண்டரில் எடுத்துப் போட்டு அரைச்சுக்கோங்க. அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து வச்சுக்கோங்க.அப்புறம் ஊறவைத்த அரிசியையும் கிரைண்டரில் போட்டு அப்பப்ப தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊத்தி முழுசா அரைத்து எடுத்துக்கோங்க.
அப்புறமா ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்த இரண்டு மாவினையம் சேர்த்து கைகளால் நல்லா கரைச்சு 8 மணிநேரம் வரை புளிக்க விட்டுருங்க.. 8 மணிநேரம் கழித்து இட்லி மாவு தயார். அப்புறம் என்ன, இட்லி மாவினை உப்பு போட்டு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து இறக்கினால் சுவையான மல்லிகைப்பூ மாதிரியான வெள்ள வெளேர்னு சுவையான இட்லி தயார். கூடவே சாம்பார், சட்னியெல்லாம் செஞ்சு தொட்டுக்கிட்டு சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.நீங்களும் செஞ்சு தான் பாருங்களேன்….