அரசியல் உலகில் அடிக்கடி அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு மாவீரர் மறைந்து விட்டார் .
அமரர் எம்ஜிஆர் காலத்தில் பி எச்.பாண்டியனுக்கு தனியிடம் இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் திமுக.வுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
அதிகார பலம் மிகுந்தவராக இருந்தார். துணை சபாநாயகராகவும் இருந்தார், சபாநாயகராகவும் இருந்தார்.
“சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு” என்று நடத்திக் காட்டியவர்.
எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகு ஜெ.அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தபோது இவர் ஜானகி அணி பக்கமாகவே இருந்தார். அந்த அணியின் சார்பில் வெற்றி பெற்ற இருவரில் இவரும் ஒருவர்.சேரன்மாதேவி மக்கள் இவரை வெற்றி பெற வைத்தனர். எம் பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அடுத்த முதல்வர் சசிகலாதான் என்கிற நிலை வந்தபோது இந்த மனிதர்தான் ” சசிகலாவுக்கு முதலமைச்சராகும் தகுதியே கிடையாது”என போரிட்டவர். இதை இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்ல பயப்பட்டார்கள். சொன்னால் கட்சியில் கட்டம் கட்டப்படுவோம் என்கிற நிலை இருந்தது. சசிகலாவின் கை ஓங்கியிருந்த கால கட்டம் அது. அப்போது பகிரங்கமாக சசியை எதிர்த்தவர் இந்த பாண்டியன்தான்.!
ஜெயலலிதா சாவிலும் சந்தேகப்பட்டவர்.மர்மம் இருப்பதாக சொன்னவர். அவரை இன்று காலன் கொண்டு போய் விட்டான்.அவரை இழந்து துயர் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.