தமிழக சட்டப் பேரவையின் 8- வது கூட்டத் தொடர், வரும் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேர வைச் செயலாளர் கே.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில்,‘தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செய லகத்தில் உள்ள சட்டப் பேரவை அரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டியிருக்கிறார். அன்று அவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.