பாலியல் வன்முறை என்பது பட உலகில், குளத்தில் பரந்து கிடக்கிற பாசி மாதிரி..!
மீ டூ புகார் நாயகிகள் இன்னமும் முணங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். படுக்கையில் எத்தனை பேருக்கு பலகாரமாய் இருந்தார் என்பதை ஸ்ரீ ரெட்டி என்கிற தெலுங்கு நடிகை பட்டியல் போட்டிருந்தார்.
அந்த பட்டியலில் நம்ம ஊரு ஜாம்பவான்களும் இருந்தார்கள். நடிப்பதற்கு வாய்ப்புக்கு கொடுத்தும் பணத்தை கொடுத்தும் அந்த நடிகையின் வாயை நம்மவர்கள் அடைத்து விட்டார்கள்.
அக்கட தேச நடிகர்களின் ஆணாதிக்க மனப்பான்மை தற்போது வெளிவரத் தொடங்கி இருக்கிறது.
நேஹா துபியா என்கிற பாலிவுட் நடிகை தெலுங்கு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சம்பவத்தை சொல்லியிருக்கிறார்.
அது என்ன?
பிரபல ஹீரோவின் படத்தில் ஹிரோயினாக நடித்துக் கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி.
ஹீரோ ஷூட்டிங்கில் இருந்தபோது செட்டில் ஓரமாக உட்கார்ந்திருந்த நேஹா துபியாவுக்கு கொலைப்பசி.
செட்டில் இருந்த மேனேஜரிடம் தனக்குப் பசிப்பதாக சொல்லி உணவு வழங்கும்படி கேட்டிருக்கிறார்.
“மேடம்..! ஹீரோ சாருக்கு லஞ்ச் பரிமாறிய பிறகுதான் மத்தவங்களுக்கு! வெயிட் பண்ணுங்க மேடம் “என்று சொல்லிவிட்டாராம்.
ஆத்திரம் ஆத்திரமாக வந்திருக்கிறது. ஆந்திரா என்ன வந்தாரை வாழவைக்கிற பூமியா, கோபத்தை அடக்கிக்கொண்டு ரெண்டு சொட்டுக்கண்ணீரோடு இருந்திருக்கிறார்.அடப்பாவிகளா…கொத்தும் குலையும் கும்மென இருக்கிற நடிகையின் பசிக்கு அன்னம் வழங்காத கொடும்பாவிகளாகி விட்டீர்களே.!