‘சிக்கன் 65’ கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்னங்க பன்னீர் 65? ன்னு நீங்க கேட்கிறது புரியுது. இது சைவ பிரியர்களுக்குக்கான அட்டகாசமான டிஷ்!
அதுவும் வருடத்தின் கடைசி 2 மாதங்களான நவம்பர்,டிசம்பர் மற்றும் வருடத்தின் முதல் 2 மாதங்களான ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் குளிர் கால மாலை வேலையில் சாப்பிட அட்டகாசமாக இருக்கும் பன்னீர் 65 .
இதனை குழந்தைகள் சப்பு கொட்டி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க பன்னீர் 65 எப்படி செய்வது என பார்க்கலாம்.
‘பன்னீர் 65’ செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் 200 கிராம். கார்ன்பவுடர் 4 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, கரம் மசாலா 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய்,தேவையான சிறிதளவு எலுமிச்சை சாறு.
பன்னீர் 65 செய்முறை:
முதலில் ஒரு பவுலில் கார்ன் மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கோங்க. பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து வச்சுக்கோங்க.
அப்புறம் அதோட உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வச்சுக்கோங்க. பிறகு அதனுடன் சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து வைக்கவும். 5 நிமிஷத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தயாராக கலந்து வைத்துள்ள பன்னீரை போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான ‘பன்னீர் 65’ தயார்.