வாலிபம் உள்ளவரை விளையாடிப் பார்ப்பது என்கிற சித்தாந்தத்தை நோக்கி இளையோர் உலகம் போய்க் கொண்டிருக்கிறது.
காதல் என்பது எந்த வயதிலும் வரலாம். கல்யாணம் பண்ணி ஆசை தீர அனுபவித்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் சலித்துக் கொள்கிறார்கள். பிரியாணிதான் என்றாலும் அதை மாதம் முழுவதும் சாப்பிட்டால் அலுக்காதா என்ன என்று கேட்பார்கள் போல.?
இப்படித்தான் ஆகிவிட்டது சிலரது மண வாழ்க்கையும்.! இவர்கள் விளையாட்டாக நினைத்து விட்டார்கள்.
நடிகர் விஷ்ணு விஷால் .இவர் காதலித்து கல்யாணம் பண்ணியவர். புகழ் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா. இவரும் சேத்தன் ஆனந்த் என்கிற விளையாட்டு வீரரை காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
ஏரில் பூட்டிய இரு மாடுகளும் வேறு வேறு திசைகளில் சென்றால் உழ முடியுமா,அந்த விவசாயம்தான் உருப்படுமா?
அந்த மாதிரிதான் ஆகிவிட்டது விஷ்ணு விஷால்,ஜ்வாலா கதையும்.! இருவரும் அவரவர் வாழ்க்கைத் துணையை விவாக ரத்து செய்து விட்டனர்.
இப்போது இருவருமே காதலர்கள். “விஷ்ணு விஷாலை மை டியர் பேபி என்று கொஞ்சி முத்தமிடுகிறார் ஜ்வாலா .இருவருமே விரைவில் தம்பதிகளாகப் போகிறார்கள். ஒரு வதந்தியை உண்மையாக்கப் போகிறார்கள்.