குபேரன் வந்து கொட்டுனா வேணாம்னா சொல்லுவாங்க.! இந்த மாதிரித்தான் இப்ப சிவகார்த்திகேயன் நிலையும் ! கோடிகளை குவித்துவரும் நிறுவனங்களில் சன் நிறுவனமும் ஒன்று. ஒரு வருடத்திற்கு இத்தனை பெரிய படங்கள் என கணக்கிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்துக்கு போட்டி லைகா .இவர்களும் சூப்பர் நடிகர்களை வைத்துதான் படம் எடுத்து வருகிறார்கள். இப்படி போட்டி போட்டுக் கொண்டு நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தி கொண்டிருக்கிறார்கள். .
பெற்றோரை தொலைத்துவிட்டு திருவிழாவில் கதறும் குழந்தை மாதிரி கோடம்பாக்கத்தில் ஏனைய தயாரிப்பாளர்கள் உடைந்து போய் கிடக்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையில் இவர்கள் எப்படி படம் எடுக்க முடியும்?
சன் நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு பெருந்தொகை தருவதாக சொல்லி வலையை விரித்திருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ்-சிவகார்த்திகேயன் கூட்டணி ராசியானது என்பது கோலிவுட் அறிந்திருக்கிற ஒன்று. சூப்பர் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை வளர்த்துக் கொண்டிருக்கிற நடிகர். குழந்தைகளும்கொண்டாடுகிறது சிவகார்த்திகேயனை.!
சிவாவுக்கு பாண்டிராஜ் கதையை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வரலாம்.