ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பு இன்று காலை 9.30 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.
‘எந்திரன் 2’ படத்துக்காக இயக்குநர் ஷங்கர் முழுவீச்சில் முதற்கட்ட பணிகளில் பணியாற்றி வந்தார். ரஜினி நடிக்கும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்பட்து வந்த
நிலையில், இன்று முதல் EVP-யில் தயார் செய்யப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. காலை 9:30 மணியில் இருந்து 10:30 மணிக்குள் முதல் காட்சியை படமாக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
‘எந்திரன் 2’வைப் பொறுத்தவரை ரஜினி, ஏமி ஜாக்சன் நடிப்பது மட்டுமே உறுதியாகி இருக்கிறது. இப்படத்தில்
இருந்து அர்னால்ட் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வேடத்தில் நடிக்க தற்போது அக்சய்குமார் நடிக்கிறார். இன்று காலை விஞ்ஞானி வசீகரன் கெட்டப்பில் ரஜினி நடிக்கும் சில காட்சிகள் அதிநவீன முப்பரிமான கேமிராவில் படமாக்கப்பட்டன.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்தார்.