கமல் ஹாசனின் மூத்த சகோதரர் பெரியவர் சாருஹாசனின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா, ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக இன்று ஆள்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் குடும்பத்தாரும், உறவினர்களும்,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாரஜினிகாந்த் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சாருஹாசன், விஜய்ஸ்ரீ.ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘தாதா87’ படத்தில் தாதா கெட்டப்பில் நடித்து இருந்தார். இந்நிலையில், விஜய்ஸ்ரீ ஜி, தனது அடுத்தபட அறிவிப்பை வெளியிட்டு ‘தாதா 90’ படத்தை சாருஹாசனை வைத்து இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளவர் இதன், போஸ்டரையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.